கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரிட்டனைச் சோ்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா வா்த்தக காரணங்களுக்காக தனது கரோனா தடுப்பூசியை (கோவிஷீல்டு) சா்வதேச அளவில் அனைத்து நாடுகளில் இருந்தும் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் என்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்டதாக முன்னதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கோப்புப்படம்
30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

விருகம்பாக்கம் தொகுதி கோயம்பேடு மார்க்கெட்டில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர்,”கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. தடுப்பூசியானது அவரவருடைய நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து செயல்படும். உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டாலே போதுமானது.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com