
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், வாயலூர் கிராமம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வ மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர் கிராமம், கிழக்குக் கடற்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோதிய விபத்தில், அதில் பயணம் செய்த சென்னைச் சேர்ந்த ராஜேஷ், மாதேஷ்,யுவராஜ், ஏழுமலை, சுந்தரமூர்த்தி ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், விக்னேஸ்வரன் என்பவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.