அமேதியில் நடைபெற்ற தேரத்ல் பிரசார பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி.
அமேதியில் நடைபெற்ற தேரத்ல் பிரசார பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி.

நாட்டில் தற்போது 70 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி

தற்போது 70 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் அவதிபட்டு வருகின்றனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

அமேதி (உத்தரபிரதேசம்): "வேலைவாய்ப்பு தருவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என பொய் நம்பிக்கைகளை விதைப்பது தான் பாஜகவின் வரலாறாக இருக்கிறது". அதற்கு உதாரணமாகவே, தற்போது 70 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் அவதிபட்டு வருகின்றனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

அமேதியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற தேரத்ல் பிரசார பேரணியில் பேசிய பிரியங்கா, "வேலைவாய்ப்பு தருவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என பெரிய பொய் வாக்குறுதிகளை விதைப்பது தான் பாஜகவின் வரலாறாக இருக்கிறது. கருப்புப் பணத்தை மீட்டு உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று கூறிய மோடி, பின்னர் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துங்கள் என்று கைவிரித்துவிட்டார்.

ஏழைகள், தொழிலாளர்கள், சாமானியர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை ஒருமுறை பொதுமக்களிடம் சொல்லுங்கள் என சவால் விட்ட பிரியங்கா காந்தி, அவர் எதுவும் செய்யாததால் அவரால் சொல்ல முடியாது" என்றார்.

வேலைவாய்ப்பு தருவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என பொய் நம்பிக்கைகளை விதைப்பது தான் பாஜகவின் வரலாறாக இருக்கிறது. அதற்கு உதாரணமாகவே, தற்போது 70 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் அவதிபட்டு வருகின்றனர்.

அமேதியில் நடைபெற்ற தேரத்ல் பிரசார பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி.
மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

இந்துக்களும் இஸ்லாமியர்களும் இப்போது விழிப்புடன் இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் வந்து, மதத்துக்கு பிரச்னை என்பார்கள். கடவுள், மதத்தின் பெயரால் தவறாக வாக்குகள் கேட்கப்படுகின்றன, கடவுளின் மீது சத்தியம் வாங்கிக்கொண்டு உங்களை பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்வார்கள். ஏனெனில் மக்களுக்காக அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. இன்று மக்கள் முன் கடவுள் நின்றிருந்தால், என் பெயரில் வாக்களிக்காதீர்கள் என்று கூறியிருப்பார். ஆனால் உங்கள் பிரதமர் மோடியிடம் உங்களுக்கு என்ன செய்தார் என்று கேளுங்கள்" என்றவர், வேலைவாய்ப்பை பற்றியோ அடிப்படை வசதிகளை பற்றியோ அவர்களால் பேச முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

ஏழைகளின் கண்ணீரை போக்குவதுதான் அரசாங்கத்தின் வேலை என சொன்னார் மகாத்மா காந்தி. ஆனால் இன்று, அதற்கு எதிரான விஷம் நடந்து கொண்டிருக்கிறது. ஏழைகள் வாழ்வதே கேள்விக்குறி ஆகியிருக்கிறது. பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பிரியங்கா காந்தி விமர்சித்தார்.

அமேதியில் வளர்ச்சி இல்லை

அமேதி தொகுதியின் தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கும் ஸ்மிருதி இராணி-க்கும், அமேதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பல பொய்களை பரப்பி பதவியை பிடித்தவர் ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு எந்தவித வளர்ச்சியையும் செய்து தரவில்லை என்றார்.

கண்டனம்

உ.பி-யில் தலித் இளைஞர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு உரிமை உள்ளதால் அவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக செலவிடப்படும் பணம் மக்களுடையது. தலித் இளைஞர் மீது இவ்வளவு கொடூரமாக தாக்குதல் நடத்த இந்த காவல்துறையினருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்று கேள்வி எழுப்பினார்.

மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்டமாக அமேதியில் மே 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com