
பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு நடிகர் சத்யராஜ் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது, பிரதமர் மோடி வேடத்தில் நான் நடிக்கிறேன் என்பது உங்கள் மூலம்தான் தெரிகிறது. இது எனக்கு புது செய்தி. நாத்திகம் பேசிய எம்.ஆர்.ராதா பல படங்களில் ஆன்மிகவாதியாக நடித்துள்ளார். வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்றார்.
கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக ஜொலித்த நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். மேலும் பிரமாண்டமாக உருவான பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
தற்போது அவர் குணசித்திர கதாபாத்திரங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.
இதனிடையே நடிகர் சத்யராஜ் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவின. பான் இந்தியா திரைப்படமாக இப்படம் பிரம்மாண்டப் பொருட்செலவில் தயாராகவுள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.