
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் கடந்த அக். 7-இல் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 35,000த்தை கடந்துவிட்டது.
இந்த நிலையில், காஸாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காஸா போா் தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பின் தலைவா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹமாஸ்க்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்க துணை நிற்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.