7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகள் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் 7 நாள்களுக்கு பின் தடை நீக்கப்பட்டு குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.
குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகள் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் 7 நாள்களுக்கு பின் தடை நீக்கப்பட்டு குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திற்கு வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை இல்லாததால், குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.
பாஜக சின்னத்துடன் மேற்குவங்க ஆளுநா்: தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் புகாா்

இதனையடுத்து, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக விலக்கி கொள்ளப்படுவதாகவும், பேரருவியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா். பழைய குற்றாலம் அருவியில் வெள்ளிக்கிழமை முதல் காலை 6 முதல் மாலை 5.30 மணி வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com