தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 25 லட்சம் பரிசு: என்ஐஏ அறிவிப்பு
தஞ்சாவூரை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019-ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கோவை: தஞ்சாவூா் அருகே திருபுவனத்தைச் சோ்ந்த பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடா்பாக தேடப்படும் 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அறிவித்துள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019-ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்கள் பாப்புலா் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.இந்த ஐந்து பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகபை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹசன் என்ற தஞ்சாவூரை சேர்ந்த 5 பேர் புகைபடங்களுடன், தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா ரூ. 5 லட்சம் என்ற வீதத்தில், 5 பேருக்கு ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தகவலை 044 2661 5100, 9499945100, 99623 61122 என்ற செல்லிடப்பேசி எண்கள் மூலமாகவும், info-che.nia@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவலை தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவா்கள் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


