
கிருஷ்ணகிரி: ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து கடந்து சென்ற ஒற்றை யானையை கண்டு அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சானமாவு போடுர் பள்ளம் பகுதியில் இருந்து ஒற்றை யானை பேரண்டபள்ளி வனப்பகுதியில் கிருஷ்ணகிரி - ஓசூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை செவ்வாய்க்கிழமை மாலை ஒரு புறத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து சென்றன.
இதனால், தேசிய நெடுஞ்சாலையை ஒற்றை யானை கடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி யானை தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக கடந்து செல்ல வழிவகை செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக வனப்பகுதிக்குள் சென்றதை அடுத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கினர்.
வனத்துறையினர் எச்சரிக்கை : ஒற்றை யானை தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனப் பகுதிக்குள் சென்றதை அடுத்து தொட்டி, காணலட்டி நல்லகானகொத்தப்பள்ளி செட்டிப்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு இரவு நேரங்களில் செல்ல வேண்டாம் என்று வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் யானை நடமாட்டத்தை கண்டால் உடனடியாக 98436 80534 என்று எண்ணிற்கு தகவல் அளிக்கும்படி வனத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.