நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

உண்மையான ரசிகர்களுக்கு நன்றி! கான்வே உருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு கான்வே நன்றி...

News image

டெவோன் கான்வே - படம்: எக்ஸ்/சென்னை சூப்பர் கிங்ஸ்

Updated On :1 நவம்பர் 2024, 2:32 pm IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே நன்றி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அதிக வரவேற்பு பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் வரும் 2025 சீசனுக்கு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள நேற்று கடைசி நாளாகும்.

வியாழக்கிழமை மாலை அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். சென்னை அணியும் நேற்று மாலை தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், இந்திய வீரர்கள் ஜடேஜா, ஷிவம் துபே, இலங்கை வீரர் பதிரனா ஆகியோரும் அன்-கேப் வீரராக தோனியையும் தக்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கான்வே தக்க வைக்கப்படாத நிலையில், அவர் வெளியிட்ட பதிவில், ”கடந்த 2 ஆண்டுகளாக அற்புதமான ஆதரவு அளித்த உண்மையான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்டிஎம் பயன்படுத்தி அல்லது ஏலத்தில் மீண்டும் கான்வேவை சென்னை நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ளும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், சென்னை ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.