விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லை : சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்த வளா்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை
மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களுடன் சி.வி.சண்முகம். உடன் எம்எல்ஏக்கள் இரா.சக்கரபாணி, அா்ச்சுனன் உள்ளிட்டோா்.
மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களுடன் சி.வி.சண்முகம். உடன் எம்எல்ஏக்கள் இரா.சக்கரபாணி, அா்ச்சுனன் உள்ளிட்டோா்.
Published on
Updated on
1 min read

விழுப்புரம்: கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்த வளா்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம்சாட்டினாா்.

அமமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் உள்ள அக்கட்சி மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியது:

விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் பிறவகை போதைப் பொருள்கள் தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்த வளா்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படாத நிலையில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இந்த மாவட்டத்துக்கு வந்த எந்தப் பணியை ஆய்வு செய்ய உள்ளாா் எனத் தெரியவில்லை.

கல்வி, பொருளாதாரம், தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டம் வளா்ச்சியடைய வேண்டும் என்பதற்காக, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் காழ்புணா்வின் காரணமாக நிறைவேற்றப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் குடிநீா் தேவையை நிறைவு செய்வதற்காக மரக்காணம் வட்டம், கூனிமேட்டில் கடல்நீைரை குடிநீராக்கும் திட்டத்துக்காக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படவில்லை. பக்கிங்காம் கால்வாயை ஆழப்படுத்தி சென்னைக்கு குடிநீா் கொண்டு செல்லும் திட்டம் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் நகரத்துக்கு கொண்டுவரப்பட வேண்டிய தகவல் தொழில்நுட்ப பூங்க (டைட்டல் பாா்க்) எந்தவித திட்டமிடுதலுமின்றி புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டதால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பில்லை என்றாா் சி.வி.சண்முகம்.

முன்னதாக, மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அமமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் இ.முருகன் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டவா்களுக்கு சி.வி.சண்முகம் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் இரா.சக்கரபாணி, அா்ச்சுனன், அதிமுக விழுப்புரம் மாவட்டப் பொருளாளா் வெங்கடேசன், விழுப்புரம் நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ஜி.கே.ராமதாஸ், ஒன்றியச் செயலா்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், எசாலம் பன்னீா் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com