முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலூரில் கைதி சித்ரவதை: மேலும் 11 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக மேலும் 11 சிறை காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

News image
வேலூர் மத்திய சிறை
Updated On :6 நவம்பர் 2024, 7:32 am

DIN

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக மேலும் 11 சிறை காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (30) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டு வேலைகளுக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவும் அப்போது டிஐஜி வீட்டில் அவர் திருட்டில் ஈடுபட்டதாக கூறி சிறையில் வைத்து 90 நாள்கள் தாக்கப்பட்டு, கொடுமை படுத்தப்பட்டதாக சிவகுமாரின் தாயார் கலாவதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சிபிசிஐடி போலீசார் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதியான நிலையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக வேலூர் சிறை துறை டிஐஜி ராஜலட்சுமி, மாவட்ட காவல் ஆய்வாளர் அப்துல்ரகுமான், சிறை வார்டன் அருள்குமரன் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்திய சிறை காவலர்களான ராஜு, ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் சிறை காவலர்கள் சரஸ்வதி, செல்வி, சிறை வார்டன் சுரேஷ், சேது ஆகிய 14 பேரை பணியிடை நீக்கம் செய்யது சிறைத் துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.