
மகாநதி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை கண்மணி மனோகரன் அத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கண்மணி மனோகரன். இதனைத் தொடர்ந்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் இரட்டை வேடங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன் பிரபல தொகுப்பாளர் அஷ்வத் என்பவரை கண்மணி மனோகரன் திருமணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மகாநதி தொடரில் விஜய் பாத்திரத்தில் நடித்துவரும் சுவாமிநாதன் அனந்தராமனின் முன்னாள் காதலியாக, வெண்ணிலா பாத்திரத்தில் கண்மணி மனோகரன் நடித்து வந்தார்.
இதையும் படிக்க: கூலி படத்தில் நடிக்கவில்லை..! காரணம் கூறிய சிவகார்த்திகேயன்!
இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ராகவி தொடரில் பிரதான பாத்திரத்தில் அவர் நடித்து வருவதால், மகாநதி தொடரில் இருந்து கண்மணி மனோகரன் விலகியுள்ளார்.
இனி, மகாநதி தொடரில் வெண்ணிலாவாக நடிகை வைஷாலி நடிக்கவுள்ளதாக அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைஷாலி வெளியிட்டுள்ள பதிவில், “இன்றுமுதல் மகாநதி குடும்பத்தில் வெண்ணிலாவாக இணைந்துள்ளேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்கு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நடிகை வைஷாலி முத்தழகு, கோகுலத்தில் சீதை, மாப்பிள்ளை, மகராசி, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.