வயநாட்டில் மிக நீளமான ஜிப்லைனில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி பயணம் செய்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு இன்று (நவம்பா் 13) இடைத்தோ்தல் நடைபெற்று வருகிறது.
வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டு இருந்தார்.
அப்போது, காராப்புழா அணை அருகேயுள்ள ஈா்ப்புவிசை மூலமாக கம்பிவடத்தில் இயக்கப்படும் மிகவும் நீளமான ஜிப்லைனில் ராகுல் காந்தி பயணித்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ளப் பதிவில், "வயநாட்டில் பிரியங்காவுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அங்குள்ள உள்ளூர் மக்களை சந்தித்தேன். சமீபத்தில் அவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து இருந்தாலும், தற்போது அவர்கள் மீண்டெழுந்துள்ளனர்.
வயநாடு எப்போது பாதுகாப்பானது மற்றும் பிரமிப்பானது என்பதை பார்வையாளர்களுக்கு வெளிக்காட்ட, தென்னிந்தியாவின் மிகவும் நீளமான மற்றும் உயரமான ஜிப் லைனில் பயணம் செய்தது மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஜிப்லைனில் பயணம் செய்த ஒவ்வொரு நிமிடமும் அனுபவம் செய்தேன்.
வயநாட்டில் எவ்வித பிரச்னையும் இல்லை, நிலச்சரிவு என்பது உள்ளூரில் நடந்த நிகழ்வு, அதனால் சுற்றுலாத்துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி ஜிப்லைனில் பயணம் செய்த விடியோ இணையத்தில் வைரலாகி, பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திக் திக் நிமிடங்கள்! கீழே 3,500 அடி பள்ளம்.. ஜிப்லைனில் தொங்கிய பயணி!

மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு செய்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

ரசிகருக்கு ரஜினி செய்த செயல்! வைரலாகும் விடியோ

வயநாடு நிலச்சரிவு: நேரில் வராத ராகுல், பிரியங்கா! பாஜக கடும் விமா்சனம்!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



