
தில்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி அவையில் ஏற்பட்ட தொடர் அமளி மற்றும் ஆம் ஆத்மி- பாஜக இடையேயான மோதல், அப்போதைய முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதானது ஆகிய காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை.
ஏழு மாத தாமதத்துக்குப் பிறகு, இன்று(நவ.14) தில்லி மேயர் தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி சார்பில் தேவ்நகர் கவுன்சிலர் மகேஷ் கிச்சி, பாஜகவின் ஷகுர்பூர் கவுன்சிலர் கிஷண் லால் போட்டியிட்டனர்.
இதையும் படிக்க: பெய்ரூட் மீது தாக்குதல்! மக்கள் வெளியேற இஸ்ரேல் அறிவுறுத்தல்!
தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் மகேஷ் குமார் கிச்சி 133 வாக்குகள் (2 செல்லாதவை), கிஷண் லால் 130 வாக்குகள் பெற்ற நிலையில், 1 வாக்கு வித்தியாசத்தில் மகேஷ் குமார் கிச்சி வெற்றிப் பெற்றார்.
இந்த நிலையில், தில்லியின் முதல் தலித் மேயராக மகேஷ் குமார் கிச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தில்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகேஷ் குமார் கிச்சி செய்தியாளர்களுடன் பேசுகையில், ”தில்லி மக்களுக்கு சேவை செய்வது சற்று சவாலாக உள்ளது. நகரின் தூய்மைக்காக வேலை செய்வதே எனது முன்னுரிமை” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.