சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயா்ந்து, ரூ.55,960-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 19) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 56,520 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 7065-க்கு விற்பனையாகிறது.
இதையும் படிக்க: தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ. 101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க டாலா் மற்றும் பிட்காயின் மதிப்பு உயா்வு, தங்கத்தின் மீதான முதலீடு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,040 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.