சென்னையில் இன்று காலை(ஜன.24)தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மேலும் ரூ.1,040 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 1,600 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டி அசுர வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காலையில் ரூ. 3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ. 500 குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று(சனிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. 1,16,960 -க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 14,620-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் பிற்பகல் மேலும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,18,000-க்கும், கிராம் ரூ.14,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி காலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 355-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 10,000 உயர்ந்து ரூ. 3,55,000 -க்கும் விற்பனையான நிலையில், பிற்பகலில் மேலும் கிராமும் ரூ.10 உயர்ந்து ரூ.365-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு சர்வதே முதலீட்டாளர்களும், பல நாடுகள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருவதே காரணம் என கூறப்படுகிறது.
Summary
today gold and silver rate in chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 18: இன்றைய தங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு! வெள்ளி விலை குறைந்தது!

ஜூன் 16: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்று(ஜூன் 1) குறைவு! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று (மே 29) மீண்டும் உயர்வு! எவ்வளவு?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




