அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இதையும் படிக்க: தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை (பகல் 1 மணி வரை) நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.