திமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

கயல் தொடரில் பிகில் பட நடிகர்!

கயல் தொடரில் அறிமுகமாகும் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்.

கயல் தொடரின் காட்சி

Published On :

கயல் தொடரில் பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் விஷ்வா நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில வாரங்களாக இத்தொடர் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.

நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர் திங்கள்முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இத்தொடரின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும் அனைத்துத் தடைகளையும் சவால்களையும் எப்படி துணிச்சலாக எதிர்கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.

தற்போது, தொடரில் கயலுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கதை அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்கிறது.

இந்த நிலையில், கயல் தொடரில் புதிய பாத்திரத்தை அறிமுகப்படுத்த தொடர் குழு முடிவெடுத்துள்ளது. அந்த புதிய பாத்திரத்தில் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான நடிகர் விஜய் விஷ்வா(அபி சரவணன்) நடிக்கவுள்ளார்.

விஜய் விஷ்வா

விஜய் விஷ்வா

பொறியியல் பட்டதாரியான இவர், அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், மாயநதி, பிகில் உள்ளிட்ட படங்களில் பிரதானப் பாத்திரங்களில் நடித்தார்.

தற்போது, இவர் கயல் தொடரில் நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ள நிலையில், கயல் தொடரின் கதை இன்னும் விறுவிறுப்புடன் செல்லும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.