சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் சாலை மறியல்

வழக்குரைஞர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்கள்.
Updated On :21 நவம்பர் 2024, 6:22 am

DIN

விழுப்புரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை வழக்குரைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து வழக்குரைஞர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வழக்குரைஞர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் எம்.காளிதாஸ் தலைமையில் அனைத்து வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் திருச்சி-சென்னை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் சகாதேவன், பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், துரைமுருகன், ராமலிங்கம், அலாவுதீன் , சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் மறியலில் பங்கேற்றனர்.

வழக்குரைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக திருச்சி - சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.