
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் பயின்றுவந்த 23 வயது இந்திய மாணவர் ஆர்யன் ரெட்டி, அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, அவர் வைத்திருந்த துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டுபாய்ந்து பலியானார்.
கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் முதுகலை மாணவரான ஆர்யன், சமீபத்தில் அவர் வாங்கிய துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது, துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும், ஆர்யன் அறைக்கு வந்த அவரது நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, ஆர்யனை அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்தனர்.
இதையும் படிக்க: காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை: ராகுல் காந்தி
ஆனால், ஆர்யன் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
ஆர்யன் ரெட்டியின் குடும்பத்தினர் தெலுங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் தற்போது உப்பல் மாவட்டத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.