டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ. 84.49 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு விகிதம்
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு விகிதம்PTI
Published on
Updated on
1 min read

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (நவ. 27) 9 காசுகள் சரிந்து ரூ. 84.49 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக நேரத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 84.45 ஆகத் தொடங்கியது. எனினும் படிப்படியாகக் குறைந்து ரூ. 84.50 ஆக இருந்தது.

பின்னர் வணிக நேர முடிவில் ரூ. 84.49 ஆக நிலைப்பெற்றது. நேற்றைய முடிவின்போது இந்திய ரூபாய் மதிப்பு ரூ.84.40ஆக இருந்தது. நேற்றைய சரிவுடன் ஒப்பிடும்போது இன்று 9 காசுகள் சரிந்து ரூ. 84.49 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவ. 21ஆம் தேதி அதிகபட்சமாக ரூ.84.50 அளவுக்கு சரிந்திருந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் அதே அளவு கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு விகிதம்
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு விகிதம்PTI

பங்குச் சந்தையிலும் சரிவு

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியிருந்தாலும், சென்செக்ஸ் 1,190 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 1,190.34 புள்ளிகள் சரிந்து 79,043.74 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.48 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 360.75 புள்ளிகள் சரிந்து 23,914.15 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.49 சதவீதம் சரிவாகும்.

துறை ரீதியாக ஏற்ற இறக்கம்

ஆட்டோ, வங்கி, ஐடி, நுகர்வு பொருள்கள், மெட்டல், பார்மா, எனர்ஜி துறை பங்குகள் 0.3 - 2% வரை சரிந்தது. பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 1% வரை உயர்ந்தது. மீடியா பங்குகள் 0.3% ஏற்றம் கண்டன.

இந்திய பங்குச் சந்தையைப் போன்று சியோல், டோக்கியோ பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தையும் நேர்மறையாகவே முடிந்தது. ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தை சரிவுடன் இருந்தன.

இதையும் படிக்க | சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, ஐடி துறை பங்குகள் வீழ்ச்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.