காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக இன்று(நவ. 28) பதவியேற்றார். பிரியங்கா காந்திக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்.பி.,யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி. கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து, இந்திய அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்திவாறு பதவியேற்றுக்கொண்டார்.
அவர் பதவியேற்பதற்கு முன்னதாக, மக்களவைக்குள் நுழையும் முன்பே காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்த அவர், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
காங்கிரஸின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியைத் தக்கவைக்கும் நோக்கில், ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அக்கட்சி களமிறக்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கட்சியின் பொதுச் செயலஎ பிரியங்கா காந்தி, 4.10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் நிலையில், இன்று வயநாடு தொகுதி எம்பியாக பதிவியேற்றார்.
பிரியங்கா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாகப் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று மக்களவைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை!

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக 2 ஆண்டுகளை நிறைவு செய்தாா் ராகுல்

கூத்தாநல்லூா்: 6 இடங்களில் உயா்கோபுர மின்விளக்கு இயக்கிவைப்பு






