ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் என கூறி ரூ.60 ஆயிரத்தை ஏமாற்றி ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News image
ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினேஷ்குமார்.
Updated On :29 நவம்பர் 2024, 7:58 am

DIN

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் என கூறி தொண்டு நிறுவனம் தொடங்கப்படுவதாகவும், அதில் உங்கள் பிள்ளையின் அனைத்து படிப்பு செலவுகளையும் தாங்களே பார்த்துக் கொள்வதாகக் கூறி ரூ.60 ஆயிரத்தை ஏமாற்றி ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை எழும்பூர் பெருமாள் ரெட்டி தெருவை சேர்ந்த வீரராகவன்(28) கடந்த 4 ஆம் தேதி சென்னை எழும்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில் மர்ம நபர் ஒருவர் எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு நான் திரைப்பட நடிகரான ராகவா லாரன்ஸின் உதவியாளர். லாரன்ஸ் தொண்டு நிறுவனம் தொடங்குவதாகவும், அதில் உங்கள் பிள்ளையின் அனைத்து படிப்பு செலவுகளையும் தாங்களே பார்த்துக் கொள்கிறோம். அதற்காக முதலில் ரூ.8,475 பணத்தை செலுத்தி குழுவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார். அதனை நம்பி போன் பே மூலம் பணத்தை அனுப்பினேன்.

பின்னர், மீண்டும் என்னை தொடர்பு கொண்டு ராகவா லாரன்ஸ் தொண்டு நிறுவனத்தில் உங்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். அதற்காக ரூ.2,875 அனுப்புங்கள் என கூறினைர். அதனை நம்பி மீண்டும் பணத்தை அனுப்பினேன்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது.மேலும் ஐம்பதாயிரம் கட்டினால் உங்களின் குழந்தையின் பட்டப்படிப்பு வரையிலான செலவை எங்களது தொண்டு நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என்றார். அதனை நம்பி மீண்டும் ரூ.50 ஆயிரத்தை செலுத்தினேன்.

பின்னர், மீண்டும் தொடர்பு கொண்டு ரூ.30,000 அனுப்பினால் ரூ.80,000-க்கான திட்டத்தில் இணைத்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த

வீரராகவன் சுதாரித்துக் கொண்டு, அந்த நபரிடம் தன்னுடைய பணத்தை திரும்பத் தருமாறு வலியுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

இந்த நிலையில், திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் தன்னிடம் மோசடி செய்து பெறப்பட்ட ரூ.61.550-ம் அந்த மர்ம நபரிடமிருந்து மீட்டுத் தருமாறு திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையர் சந்தோஷ்ஹதி மானியிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் மாவட்ட காவல் உதவி ஆணையர் ஜெகதீசன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் விமல் மற்றும் குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் மாரி, காவலர் பவித்ரன் ஆகியோர் ஒன்றிணைந்து விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மர்ம நபர் வேலூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வேலூருக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை போலீசாரின் விசாரணையில், அந்த மர்ம நபர் வேலூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் பிரிவின் கீழ் தினேஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அவரிடமிருந்து போன் பே மூலம் மோசடி செய்த ரூ. 60 ஆயிரத்தையும் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.