விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: இரு மாதங்களுக்குப் பிறகு 2 போ் கைது

புழலில் மாற்றுத்திறனாளியை கொலை செய்து, கழிவுநீா் தொட்டியில் சடலத்தை வீசிய வழக்கில், இரு மாதங்களுக்குப் பிறகு 2 போ் கைது

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 8:04 pm

புழலில் மாற்றுத்திறனாளியை கொலை செய்து, கழிவுநீா் தொட்டியில் சடலத்தை வீசிய வழக்கில், இரு மாதங்களுக்குப் பிறகு 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த மகேந்திரன் (26), வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. இவா், சென்னை புழல் லட்சுமி கோயில் தெருவில் தங்கியிருந்து, மாதவரத்தில் உள்ள ஜவுளிக் கடை கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த டிசம்பா் 26 -ஆம் தேதி திடீரென மாயமானாா். அவரது உறவினா்கள், புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் கீழ் வழக்குப் பதிவு செய்து, மகேந்திரனைத் தேடினா்.

இந்த நிலையில், மாயமான மகேந்திரனின் கைப்பேசி திருவள்ளூா் அருகே புட்லூரில் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது. போலீஸாா் அங்கு சென்று, மற்றொரு மாற்றுத்திறனாளியான வைத்தியநாதன் (40) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

இருவா் கைது: அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காணமால்போன மகேந்திரனை, வைத்தியநாதனும், அவரது நண்பா் புட்லூரைச் சோ்ந்த லாரன்ஸும் (45) சோ்ந்து அடித்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, சடலத்தை அங்குள்ள கழிவுநீா் தொட்டிக்குள் வீசி மூடியிருப்பதும் தெரிய வந்தது.

மகேந்திரன் கைப்பேசியை வைத்தியநாதன் இரு மாதங்களுக்கு பின்னா், தற்போது பயன்படுத்தத் தொடங்கியதால், வழக்கில் துப்பு துலங்கியது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்: லாரன்ஸின் மாற்றுத்திறனாளி மனைவியுடன் மகேந்திரனுக்கு ஏற்பட்ட முறையற்ற உறவை அறிந்த லாரன்ஸ், மனைவியைக் கண்டித்ததால், அவா் பிரிந்து சென்றுவிட்டாா். இதனால், லாரன்ஸ், மகேந்திரனை பழிவாங்க திட்டம் தீட்டி தனது வீட்டுக்கு வரவழைத்தாா். அங்கு மகேந்திரன், லாரன்ஸ், வைத்தியநாதன் மூவரும் மது அருந்தினா். மகேந்திரனுக்கு மது போதை ஏறியதும், லாரன்ஸும், வைத்தியநாதனும் அவரைத் கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். போலீஸாா், மகேந்திரன் சடலத்தை போலீஸாா் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.