புயல் மழை தொடர்பான புகார்கள், உதவி எண்கள் அறிவிப்பு

மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கான தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
புயல் மழை தொடர்பான புகார்கள், உதவி எண்கள் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கான தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலானது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை (டிச.1) காலை கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கையை அடுத்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.

மாநில உதவி எண் - 1070

மாவட்ட உதவி எண் - 1077

வாட்ஸ் அப் எண் - 94458 69848

விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கான உதவி எண்கள்

விழுப்புரம் மாவட்ட பொது பொதுமக்கள் 1077, 04146-223 265, 7200151144 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பகுதி புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.