புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

லாரி - பைக் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது.

News image
லாரி - பைக் மோதி விபத்து.
Updated On :1 அக்டோபர் 2024, 7:39 am

DIN

கோவை தேசிய நெடுஞ்சாலை மல்லூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சென்னன். இவரது மகள் சுதா மற்றும் பேரன் விஷ்ணு ஆகியோரை திருச்சி சமயபுரம் கோயிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, மல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு, பேருந்தில் ஏறி சமயபுரம் கோயிலுக்கு செல்ல திட்டுமிட்ட இருந்த சென்னன், கோவை தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனம் மூலம் கடக்க முயன்றபோது, லாரி மோதியதில் சம்பவ இடத்திலே 3 பேரும் பலியாகினர்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்ததன்பேரில், பலியானவர்களின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.