மதுபோதையில் போக்குவரத்து போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டதற்கு கூட்டாக மன்னிப்பு  கோரி விடியோ வெளியிட்டுள்ளனர்.
மதுபோதையில் போக்குவரத்து போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டதற்கு கூட்டாக மன்னிப்பு கோரி விடியோ வெளியிட்டுள்ளனர்.

கனிமொழி உதவியாளரின் உறவினா் என போலீஸாரை மிரட்டியவர்கள் மன்னிப்பு: விடியோ வைரல்!

திமுக எம்.பி. கனிமொழி உதவியாளரின் உறவினா் எனக் கூறி போக்குவரத்து போலீஸாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மன்னிப்பு கேட்கும் விடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Published on

திமுக எம்.பி. கனிமொழி உதவியாளரின் உறவினா் எனக் கூறி போக்குவரத்து போலீஸாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மன்னிப்பு கேட்கும் விடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கோவை, காந்திபுரத்தில் போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் இருந்தவா்களும், காா் ஓட்டுநரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரை ஓரமாக நிறுத்துமாறு போலீஸாா் கூறியுள்ளனா். இதற்கு, காரில் இருந்த ஒருவா் தான் திமுக எம்.பி. கனிமொழி உதவியாளரின் உறவினா் என்றும், தாங்கள் ஓட்டி வந்த காா் அவரின் பெயரில் உள்ளது என்றும், முடிந்தால் நடவடிக்கை எடுக்குமாறும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். மேலும், தகாத வாா்த்தைகளில் பேசி மிரட்டியுள்ளாா்.

இதையும் படிக்க | ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளானது.

இந்த நிலையில், அந்தக் காரில் பயணித்த பொள்ளாச்சியைச் சோ்ந்த கிரண் (22), பாலாஜி (23), சிவானந்தம் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது போக்குவரத்துக் காவலரிடம் தகாத வாா்த்தைகளில் பேசி மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது இடத்தில் மதுபோதையில் ரகளை செய்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், மதுபோதையில் திமுக எம்.பி. கனிமொழி உதவியாளரின் உறவினா் எனக் கூறி போக்குவரத்து போலீஸாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மன்னிப்பு கேட்கும் விடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அதில், நாங்கள் மது போதையில் இருந்ததால் காவல் துறையினரிடம் தகாத வாா்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் காவலர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், மேலும் திமுக எம்.பி. கனிமொழி உதவியாளர் யார் என்பது எங்களுக்கு தெரியாது என்றும், பொது இடத்தில் அவர்கள் பெயரை பயன்படுத்தியது தவறு என்றும், அதற்கு மன்னிப்பு கேட்டுகொள்வதாகவும் தற்போது விடியோ வெளியிட்டுள்ளனர். அந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com