
நடிகர் ராகுல் ரவி, நடிகை தமன்னாவுடன் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து வருபவர் நடிகர் ராகுல் ரவி.
சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், தொடர்ந்து சாக்லெட் தொடரில் நடித்தார். கரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாக இத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கண்ணான கண்ணே தொடரில் பிரதானப் பாத்திரத்தில் நடித்து இருந்தார். இத்தொடரில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப் பெற்றது.
கடந்த 2020-ல் ராகுல் ரவி, தான் காதலித்த லட்சுமி நாயர் எனபவரை திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராகுல் ரவி மீது லட்சுமி நாயர் வழக்கு தொடுத்தார்.
இதையும் படிக்க: சிறகடிக்க ஆசை முத்துவுக்கு பொன்னி தொடர் நாயகியுடன் திருமணம்!
தற்போது, ராகுல் ரவி, கேப்ரியல்லாவுடன் மருமகள் தொடரில் நடித்து வருகிறார். இத்தொடர் டிஆர்பியில் முன்னணியில் இருப்பதோடு, ரசிகர்களின் மனம்கவர்ந்த தொடராகும் உள்ளது.
இந்த நிலையில், ராகுல் ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமன்னாவுடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
ராகுல் ரவியின் பதிவிற்கு, அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், வெள்ளித்திரையில் பெரிய நடிகராக ராகுல் ரவி ஜொலிக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.