மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு...

எழுத்தாளர் ஹான் காங்.

Published On :

இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான நோபல் விருதுகள் கடந்த திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசை அறிவித்துள்ளனர்.

Story image

இந்த முறை, தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் விருதை வென்றுள்ளார். கவித்துவமான மொழியில் தீவிர உரைநடையில் வரலாற்றுத் துயரையும் மனித வாழ்க்கையின் பலவீனங்களையும் ஹான் காங் எழுதியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

1970 ஆம் ஆண்டு பிறந்த ஹான் காங் இளவயது முதலே இலக்கியம் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். காரணம், ஹானின் தந்தையும் ஒரு நாவலாசிரியரே.

Story image

1993 ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுத ஆரம்பித்த ஹான் காங் சிறுகதைகள், நாவல்கள் என இதுவரை பல நூல்களை எழுதியுள்ளார். இவரின் நாவலான, த வெஜிடேரியன் ( the vegetarian) புக்கர் பரிசை வென்றது. இதனை, தமிழில் எழுத்தாளர் சமயவேல், ‘மரக்கறி’ என்கிற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.