

கனமழை எச்சரிக்கையைடுத்து, சென்னையில் நாளை(அக். 15) நடைபெறவிருந்த பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியினை மாற்றம் செய்து கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை, லேடி வில்லிங்கடன் கல்வியியல் கல்லூரியில் நாளை (அக். 15) நடைபெற இருந்த பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கனமழை காரணமாக வரும் அக். 21 (திங்கள் கிழமை) அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோரப் பகுதியை நோக்கி அடுத்த 48 மணிநேரத்தில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் ஓரிரு நாள்களில், அதி கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.