கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக். 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதையும் படிக்க: கனமழை: வேளச்சேரிக்கு படகுகள் அனுப்பிவைப்பு!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் ஓரிரு நாள்களில், அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக். 14) விடுமுறையை புதுவை அரசு அறிவித்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஃபா: கேரளத்தைத் தொடர்ந்து, மேகலாயத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

இன்றைய செய்திகள் ஜூலை 19 - நேரலை

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டி: கேரளத்தைத் தொடர்ந்து மணிப்பூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பைக்கு மிக கனமழை எச்சரிக்கை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



