எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்

ஆவின் பால் தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :14 அக்டோபர் 2024, 7:33 am

DIN

ஆவின் பால் தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று சென்னை, நெல்லூர் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 16, 17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையையடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் பால் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணைகளிலும் 500 கிராம் எடை கொண்ட 4,000 பால் பவுடர் பாக்கெட்டுகள் என மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பில் உள்ளது. மேலும் 90 நாள்கள் கெடாமல் இருக்கக்கூடிய அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் 50,000 எண்ணிக்கையில் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தயார் நிலையில் உள்ளன.

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்கண்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆவடி, அண்ணசாலை, தி.நகர், பூவிருந்தவல்லி, மாதவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய ஆவின் பாலகங்களில் தலா 1,000 கிலோ இருப்பு உள்ளது. கால்நடை தீவனம் சுமார் 500 டன், தாதுப்பு கலவை சுமார் 50 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.