திமுக ஆட்சியில் சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீா்வு காணும் பொருட்டு 2021-இல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை பரிந்துரைத்த திட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதையெல்லாம் திமுக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்களை ஏமாற்றும் நாடகங்களை நடத்துவதைக் கைவிட்டு, போா்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.