கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் வெள்ளநீர் வடியக் காரணம்? - மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

chennai rain

சென்னை கிண்டியில் முதல்வர் ஆய்வு

Published On :

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு மழை படிப்படியாக குறைந்து தற்போது மிதமான மழையே பெய்து வருகின்றது.

நேற்று முழுவதும் பெய்த கனமழையினால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேங்கியது. அதனைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து களப்பணியில் உள்ளார். பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இன்று(புதன்கிழமை) காலை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைக்கப்படவிருக்கும் நீர் நிலை, பூங்கா குறித்த பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பள்ளிக்கரணை பகுதியில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் பள்ளிக்கரணையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'பல இடங்களில் தேங்கிய வெள்ளநீர் வடிந்துள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில் கைகொடுத்துள்ளது. மக்களிடமே கேளுங்கள். கடந்த 3 மாதங்களாகவே பருவமழைக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் இதற்கென ஒரு குழு அமைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த குழு பரிந்துரைத்த பணிகளை படிப்படியாக செய்து வருகிறோம். முழு பணிகளையும் விரைவில் முடிப்போம்.

மழை, வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கும் நன்றி' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.