ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோற்றால்..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தகுதி பெறுமா?

இந்தியா தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா என்பது குறித்து...

News image
- படம் | பிடிஐ
Updated On :17 அக்டோபர் 2024, 11:04 am

DIN

நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தகுதி பெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் 5 பேர் டக் அவுட் ஆகினர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் 8 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. அந்த 8 போட்டிகளில் நியூஸிலாந்துக்கு எதிராக உள்ள முதல் போட்டு உள்பட 5-ல் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழல் உள்ளது.

முதல் டெஸ்டில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வரும் இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலோ அல்லது டிரா செய்தாலோ மூன்றாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒருவேளை இந்த டெஸ்ட் போட்டியின் மீதமுள்ள நாள்கள் மழையால் பாதிக்கப்பட்டு டிராவில் முடிந்தால், இந்திய அணி மீதமுள்ள 2 போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும்.

மேலும், நியூஸிலாந்துக்கு எதிரானப் போட்டியில் 0-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் 5-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும். இல்லையெனில் லீக் சுற்றுடன் வெளியேறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.