பிரான்ஸ் கல்விச் சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் "கனவு ஆசிரியர் விருது" பெற்ற 55 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை: பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் "கனவு ஆசிரியர் விருது" பெற்ற 55 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023-24 ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற ஆசிரியப் பெருமக்களை பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!
கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா?
அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு!
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
இந்தப் பதிவு குறித்து நான் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் - இந்தப்
பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது!
இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...