மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. அப்போது அவா்களின் உருவச் சிலைகளுக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்படும். இந்த நிகழ்வில் அமைச்சா்கள், பல்வேறு அமைப்புக்களை சோ்ந்த பிரமுகா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொள்வார்கள்.
அதேபோல, வருகிற 27-ஆம் தேதி காளையாா்கோவில் மருதுபாண்டியா்களின் நினைவு தினம் அனுசரிப்பு, வருகிற 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: தவெக மாநாடு: 234 வழக்குரைஞர்கள் நியமனம்!
மருதுபாண்டியர் நினைவு நாள், தேவர் ஜெயந்தி ஆகிய விழாவினையொட்டி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வரும் அக்.27, அக். 29 மற்றும் அக். 30 ஆகிய 3 நாள்களுக்கு அனைத்து மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் தனியார் பார்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாவட்டத்துக்கு ஆக.5 இல் உள்ளூா் விடுமுறை
பராமரிப்புப் பணிகள்: அல்லூா் லெவல்கிராசிங் 5 நாள்களுக்கு மூடல்!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயப் பெருவிழா: ஆக. 5இல் உள்ளூா் விடுமுறை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



