குஜராத்: 10 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ராஜ்கோட்டில் உள்ள 10 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள ஹோட்டல்களுக்கு மதியம் 12.45 மணியளவில் மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியவர், தன்னை கான் டென் என அடையாளப்படுத்திக் கொண்டு, தான் 10 ஹோட்டல்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகவும், அவை சில மணி நேரத்தில் வெடித்துவிடும்.
இன்று பல அப்பாவி உயிர்கள் பலியாகும். விரைந்து சென்று ஹோட்டலை காலி செய்யுங்கள் என தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு... குஜராத்தில் ஒருவர் கைது!
உடனே வெடிகுண்டு செயலிழக்கும் படை மிரட்டல் விடுக்கப்பட்ட ஹோட்டல்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் நீடித்த தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்று காவல் ஆய்வாளர் எஸ்.எம். ஜடேஜா கூறினார்.
மாலை 6 மணியளவில் தேடுதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இதையடுத்து மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
இதனால் ராஜ்கோட்டில் ஹோட்டல்களில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.