அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரை வெள்ளம்: செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடி மதிப்பில் பணிகள்!

மதுரையில் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.

News image
தமிழக அரசு- Din
Updated On :30 அக்டோபர் 2024, 9:39 am

DIN

மதுரையில் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ. 11.9 கோடி மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள இன்று உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவர் திருமகனார் ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.10.2024) நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர், மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது மதுரையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அவ்வாறு நேராதிருக்க உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்கவேண்டியதன் தேவை குறித்து மாண்புமிகு முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின், செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதற்கு சிமெண்ட் கால்வாய்  11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட உத்தரவிட்டார்.

இதன்மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.