ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட மாதிரி புகைப்படத்தை அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்

வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட மாதிரி பெட்டி புகைப்படத்தை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

பிஇஎம்எல் நிறுவன வளாகத்தில் புதிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலைக்கு மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கல் நாட்டினாா்.

Published On :1 செப்டம்பர் 2024, 11:08 pm IST

பெங்களூரு: வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட மாதிரி பெட்டி புகைப்படத்தை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் மாதிரி பெட்டியின் புகைப்படத்தை பெங்களூரில் உள்ள ‘பாரத் எா்த் மூவா்ஸ் (பிஇஎம்எல்)’ நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நிகழ்வில் வெளியிட்டாா்.

பின்னர், பிஇஎம்எல் நிறுவன வளாகத்தில் புதிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலைக்கு அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கல் நாட்டினாா்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் மாதிரி பெட்டியின் தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளது. பெங்களூரில் உள்ள பாரத் நிறுவனத்தின் வளாகத்தில் அதன் சோதனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அடுத்த 10 நாள்களுக்கு நடைபெறும் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தண்டவாளங்களில் அது பரிசோதிக்கப்படும். இந்த சோதனை நடைமுறை முடிவடைந்ததும் அடுத்த மூன்று மாதங்களில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என வைஷ்ணவ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.