கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
GOAT
‘கோட்’ படத்தின் புகைப்படம். DIN
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times).

இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கோட் திரைப்படம் நாளை (செப். 5) திரையரங்குகளில் வெளியாவுள்ளது.

GOAT
கோலி சோடா ரைசிங் டிரைலர்!

தமிழகத்தில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கோட் திரைப்படத்தின் 9 மணி காட்சிக்கு நாளை ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாள்களுக்கு கோட் படத்தின் சிறப்புக் காட்சிகளை திரையிட வேண்டும் என்று படக்குழு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com