சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே செம்மஞ்சேரியில் புதன்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரியில் சாலையோரத்தில் பழுதான மினி லாரி நின்றுகொண்டிருந்தது.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த விபத்தில் மினி லாரிக்கு அடியில் கார் சிக்கிக்கொண்டதால் காரில் இருப்போரை மீட்க முடியவில்லை. காரின் இருப்போரிந் உடல்களை மீட்கும் பணியில் கேளம்பாக்கம் போலீசார் மற்றும் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவர்களின் விவரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.: சாலை விபத்தில் 10 போ் உயிரிழப்பு
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!

சிக்கன் புலாவ், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




