எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம் ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும்: இந்தியக் கம்யூனிஸ்ட்

அன்றாட கூலி உழைப்பில் வாழ்வாதாரம் பெறும் தமிழக மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும்

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்
Updated On :4 செப்டம்பர் 2024, 9:25 am

DIN

அன்றாட கூலி உழைப்பில் வாழ்வாதாரம் பெறும் தமிழக மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும் எனவும், இந்த விவகாரகத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதியும் இதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி மேலும் 10 மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்து, கரை திரும்பும் போது, இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 மீனவர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த இரண்டு படகுகளையும் சிறைப்பிடித்து இலங்கை கல்பிட்டி மீன் வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் மீதான வழக்கை விசாரித்த கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம் முதலில் படகில் சென்ற 12 மீனவர்களுக்கு ரூ.5 கோடியே 40 லட்சம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது. மற்றொரு படகில் சென்ற 10 மீனவர்கள் மீதான வழக்கில், இந்திய தூதரகம் தலையிட்டுள்ளதால், அதன் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு பேரதிர்ச்சி தருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை. இப்போது இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை தண்டனை விதித்து தாக்குதல் நடத்தும் நிலைக்கு சென்றிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

அன்றாட கூலி உழைப்பில் வாழ்வாதாரம் பெற்றுள்ள மீனவர்கள் தலா ரூ.42 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது கற்பனைக்கு எட்டாத தாக்குதலாகும். தமிழக மீனவர்களை ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும்.

மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். இலங்கை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, தூதரகம் மூலமாக மத்திய அரசு சட்டரீதியான உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.