இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழ்வதாகவும், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், 21.7.2024 அன்று IND-TN-12-MM-5900 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 3.9.2024 ஆம் தேதி ரூ. 1.5 கோடி அபராதம் விதித்ததாகவும், இது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.