மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், மங்கோலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் திங்கள்கிழமை (ஜூன் 22 முதல் 25 வரை) 4 நாள்களுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இந்தியாவின் மூலோபாயக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கமாகக் கொண்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மங்கோலியா மற்றும் தென் கொரியாவிற்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் வகையில் மங்கோலியாவில் ஜூன் 22 முதல் 23 ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் அமைச்சா் ஜெய்சங்கர், அந்நாட்டின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகிறார். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பி.பட்ஸெட்செக் உடன் இருதரப்பு நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் விவாதிக்க உள்ளனா் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மங்கோலிய பயணத்தைத் தொடா்ந்து, தென் கொரியாவில் ஜூன் 24 மற்றும் 25 தேதிகளில் அமைச்சா் ஜெய்சங்கர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தின் போது, அமைச்சர் வெளியுறவு அமைச்சர் சோ ஹியுனைச் சந்சித்து பேசுகிறார். மேலும், வியாழக்கிழமை(ஜூன் 25 ) ஜெஜூவில் நடைபெறும் புகழ்பெற்ற அமைதி மற்றும் செழிப்புக்கான ஜெஜூ மன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்புரையாற்றுவார்.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் லீ ஜே-ம்யுங் ஆகியோரிடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த நான்கு நாள் பயணம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இரண்டு முக்கியக் கூட்டாளிகளுடனான இந்தியாவின் உறவுக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதோடு, அந்த பிராந்தியத்தில் இந்தியாவின் பரந்த மூலோபாய, பொருளாதார மற்றும் தூதரக நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
External Affairs Minister Dr S Jaishankar will undertake an official visit to Mongolia and South Korea beginning today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயங்கரவாதத்தை உலகம் சகித்துக் கொள்ளக் கூடாது: எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தல்

நிஜ உலகில் வாழுங்கள்: கமேனி - டிரம்ப் சந்திப்பு தொடர்பாக ஈரான் கருத்து!

ஆக்கும் சக்தி திமுக, அழிக்கும் சக்தி தவெக: முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு!
தமிழ்நாட்டின் இளம் அமைச்சரானார் கமலி!
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!





