கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், நடிகர் விஜய்யை பார்த்து ஆளும் கட்சி அஞ்சுகிறது என பாஜக சட்டப்பேரவை குழு தலைவா் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

News image

நயினார் நாகேந்திரன் பேட்டி(கோப்புப்படம்) - DOTCOM

Updated On :5 செப்டம்பர் 2024, 8:49 pm IST

திருநெல்வேலி: அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், நடிகர் விஜய்யை பார்த்து ஆளும் கட்சி அஞ்சுகிறது என பாஜக சட்டப்பேரவை குழு தலைவா் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி தான். அதிமுகவில் பெரும் பதவியில் இருந்துவிட்டு பாஜகவில் இணைந்தேன். எனக்கு கட்சி பதவி முக்கியம் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். வரும் காலத்தில் அவருக்கு நிச்சயம் உரிய பதவி கிடைக்கும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளன. நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

முதல்வர் வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் நடிகர் விஜயை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது. யாா் காட்சி தொடங்கினாலும், அவா்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். விஜய் மாநாட்டிற்கு அனுமதி வழங்கினால் எந்த பிரச்னையும் இல்லை. கட்சி மாநாட்டிற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.