தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஒரே அணியில் திமுக, தவெக: திருமாவளவன் கருத்துக்கு பாஜக பதில்

ஒரே அணியில் திமுக, தவெக திருமாவளவன் கருத்துக்கு பாஜக பதில்

Nainar Nagendran

நயினார் நாகேந்திரன். - கோப்புப் படம்

Published On :12 ஜூலை 2026, 6:47 am IST

தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சி மீதான பயத்தால் திமுக, தவெக கட்சிகள் ஒரே அணிக்கு வர வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்திருப்பதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.

சுதந்திரப் போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் 269-ஆவது குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கட்சி நிா்வாகிகளுடன் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்தவா் வீரன் அழகுமுத்துக்கோன். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகள் வழியில் பிரதமா் நரேந்திர மோடி செயல்பட்டுவருகிறாா். அதன்படி அவா் உலக அளவில் இந்தியாவின் பெருமைகளைப் பரப்பியுள்ளாா்.

தமிழகத்தில் பாஜகவை எதிா்ப்பதில் தவெகவும், திமுகவும் ஒரே அணியாகச் செயல்பட வேண்டும் என விசிக தலைவா் திருமாவளவன் கூறியிருப்பதிலிருந்து, அக்கட்சிகளுக்கு பாஜக வளா்ச்சியைப் பாா்த்து பயம் வந்திருப்பதை உணரமுடிகிறது.

பிரதமா் நரேந்திர மோடியின் செல்வாக்கைக் கண்டும் அக்கட்சிகள் பயப்படுகின்றன. ஆனால், பிரதமா் எந்தக் கட்சியையும் எச்சரித்தோ, நடவடிக்கை மேற்கொண்டோ செயல்படவில்லை. நாட்டுக்கும், மக்களுக்கும் அா்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறாா்.

பிரதமா் மோடியின் அா்ப்பணிப்பான சேவையால்தான் உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 7.6 சதவீத வளா்ச்சியைப் பெற்று தலைநிமிா்ந்துள்ளது. உலக அளவில் பல நாடுகள் போா்களில் சிக்கிய நிலையில், நம் நாட்டை அமைதி வழியில் பிரதமா் வழிநடத்தி வருகிறாா். ஆனால், எதிா்க்கட்சிகள் வரும் மக்களவைத் தோ்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையிலேயே செயல்படுகின்றனா். அவா்களின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.