மதுரை அப்பல்லோ சந்திப்பில் நான்கு வழித்தடச் சாலை மேம்பாலம் அமைக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

அப்பல்லோ சந்திப்பில் நான்கு வழித்தடச் சாலை மேம்பாலம் அமைப்பதுடன் மூன்று சந்திப்புகளிலும் ரவுண்டானாவுடன் கூடிய சந்திப்பு மேம்பாடு செய்து நான்கு வழித்தடச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை
மதுரை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைப்பெற்று வரும் சாலை மற்றும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை களஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு.
மதுரை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைப்பெற்று வரும் சாலை மற்றும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை களஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு.
Published on
Updated on
2 min read

மதுரை: அப்பல்லோ சந்திப்பில் நான்கு வழித்தடச் சாலை மேம்பாலம் அமைப்பதுடன் மூன்று சந்திப்புகளிலும் ரவுண்டானாவுடன் கூடிய சந்திப்பு மேம்பாடு செய்து நான்கு வழித்தடச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்று வரும் கோரிப்பாளையம் மேம்பாலம் மற்றும் அப்பல்லோ சந்திப்பு மேம்பாலக் கட்டுமானப் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வியாழக்கிழமை களஆய்வு செய்தார்.

மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான “கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 30.10.2023 துவக்கிவைத்தார். ரூ.150.23 கோடி மதிப்பீட்டில், சிவகங்கை சாலையில் அப்பல்லோ சந்திப்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் களஆய்வு செய்து விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

இந்த சாலை சென்னை, திருச்சி மற்றும் சிவகங்கையிலிருந்து மதுரை மாநகருக்குள் நுழையும் பிரதான சாலையாகும். இச்சாலையில் உள்ள அப்பல்லோ சந்திப்பு, ஆவின் சந்திப்பு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளிலும் தற்போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், தற்போது அப்பல்லோ சந்திப்பில் நான்கு வழித்தடச் சாலை மேம்பாலம் அமைப்பதுடன் மூன்று சந்திப்புகளிலும் ரவுண்டானாவுடன்கூடிய சந்திப்பு மேம்பாடு செய்து நான்கு வழித்தடச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

ஆய்வில், பாலப் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் பாதாளசாக்கடை குழாய்களை விரைவில் மாற்றி அமைத்து பாலப்பணிகளை வேகப்படுத்தவும், மேலும், சாலைச் சந்திப்புகள் அகலப்படுத்த தேவையான நிலஎடுப்பு பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.

இப்பணிகள் அனைத்தும் ஒப்பந்த காலமான ஆகஸ்டு 2025-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணி துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

இந்த பணி நிறைவுப் பெற்ற பின்னர் மதுரை மாநகரின் பிரதானச் சாலையான சிவகங்கை சாலையில், சுற்றுச்சாலை முதல் கோரிப்பாளையம் வரை, போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைப்பெற்று வரும் சாலை மற்றும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை களஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு.
ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தந்தை, தங்கை வெட்டிக்கொலை!

அதனைத் தொடர்ந்து, அமைச்சர், கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை களஆய்வு செய்தார்.

கோரிப்பாளையம் சந்திப்பானது, மதுரை மாநகரின் வடபகுதியையும், தென்பகுதியையும் இணைக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மிக முக்கிய சந்திப்பாகும் என்று தெரிவித்த அமைச்சர், இப்பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி, கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து, வைகை ஆற்றில் ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்கு இணையாகப் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் அமைக்கப்படும் என்றும், மேலும், கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து, செல்லூர் நோக்கி கூடுதலாக ஒரு இணைப்பு பாலமும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வின்போது, பாலப் பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் பாதாளசாக்கடை குழாய்களை விரைவில் மாற்றி அமைத்து பாலப்பணிகளை விரைவுப்படுத்தவும், மேலும் சேவைச் சாலை அமைக்க தேவையான நிலஎடுப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அனைத்து மேம்பாலப் பணிகளும் நவம்பர் 2025-க்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகள் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

இப்பணியினால் தமுக்கம் சந்திப்பிலிருந்து அண்ணா சிலை சந்திப்பு வரை மற்றும் செல்லூர் சாலையிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் வரையிலும் வாகனப் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று தெரிவித்த அமைச்சர், கட்டுமானப் பணிகள் தரமானதாகவும், உறுதியுடனும் இருப்பதைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரின் களஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, மதுரை மாவட்ட ஆட்சியர் சௌ.சங்கீதா, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அதிகாரி (தொழில்நுட்பம்) ஆர்.சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் கே.ஜி.சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் எம்.சரவணன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com