ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சென்னையில் தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 53,440-க்கு விற்பனையாகிறது.

News image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 குறைந்தது.

Updated On :7 செப்டம்பர் 2024, 5:27 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 53,440-க்கு விற்பனையாகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பதிப்பு குறைவு, பங்குச் சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்ட சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாலும் தற்போது தங்கம் விலை உயா்ந்து வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென பவுனுக்கு ரூ. 408 உயா்ந்து ரூ.53,760-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 6,680-க்கும், பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.53,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 2 உயா்ந்து ரூ.92-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.89.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 2,500 குறைந்து ரூ. 89,500-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.