சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.10) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, திங்கள்கிழமை நண்பகல் ஒடிஸா மாநிலம் பூரிக்கு அருகே கரையைக் கடந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தமிழக வானிலை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (செப்.10) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதன் முதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.11-15) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாா், சேலம் மாவட்டம் மேட்டூா் தலா 30 மி.மீ. மழை பதிவானது. டேனிஷ்பேட்டை (சேலம்), சின்கோனா, வால்பாறை, சோலையாா் (கோவை) தலா 20 மி.மீ., வானூா் (விழுப்புரம்), இரணியல் (கன்னியாகுமரி), மணலூா்பேட்டை (கள்ளக்குறிச்சி), நாலுமுக்கு (திருநெல்வேலி), மேட்டூா் (சேலம்) தேவாலா, அவலாஞ்சி (நீலகிரி), மணம்பூண்டி (விழுப்புரம்), பெரியாறு (தேனி), காக்காச்சி (திருநெல்வேலி), தலா 10 மி.மீ.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமை(செப்.10, 11) வரை மன்னாா் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
13 இடங்களில் வெய்யில் சதம்: தமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு கன மழை எச்சரிக்கை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



